உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கார்க் நகரில் உள்ள பில்ரியாகஞ் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த அர்பியா இமான் என்ற சிறுமியும் கலந்துகொண்டார்.
அப்போது போராட்டத்தைக் காணவந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்தச் சிறுமியின் துணிச்சலைக் கண்டு வியந்து அவரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில், சிறுமி அர்பியாவுக்கு பிரியாங்கா காந்தி தற்போது பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். பிரியங்கா காந்தியின் சார்பில் காங்கிரஸ் கட்சியினர் அபியானை சந்தித்து அந்தப் பரிசை வழங்கினர்.
பரிசுடன் சேர்ந்து பிரியங்கா ஒரு கடிதத்தையும் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், "உனக்குப் பிடித்தமாதிரி சில பரிசுகள் அனுப்பியுள்ளேன். தற்போது இருப்பது போன்று துணிச்சலான பெண்ணாக இருக்க வேண்டும். உனக்குத் தோன்றும்போது எனக்கு கால் பண்ணு. இப்படிக்கு பிரியங்கா அத்தை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க : ஜப்பான் சொகுசுக் கப்பல்: மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா!