பழங்குடியின மக்களின் அடையாளமாகத் திகழும் பிர்சா முண்டா 1875 நவம்பர் 15ஆம் தேதி பிறந்தார்.
19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பழங்குடியின மண்டலமாக அறியப்படும் பிகார், ஜார்கண்ட் மாநிலங்களில் பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து உரிமைக்காகப் போராடினார்.
இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் நீர், காடு, நிலம், பழங்குடியினர்களின் அடையாளம் ஆகியவற்றிற்காகவும் போராடினார். இந்நிலையில், அவரது பிறந்தநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
- நீர், காடு, நிலம் தொடர்பான விவகாரங்களில் பழங்குடியின மக்கள் முடிவெடுப்பார்கள் என நீங்கள் (பிர்சா முண்டா) கூறியுள்ளீர்கள்.
- இன்று பிறந்தநாள் காணும் பழங்குடியின தலைவரும் மிகச்சிறந்த சுதந்திரப் போராளியுமான பிர்சா முண்டாவுக்கு மரியாதை அஞ்சலி செலுத்துவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.