ETV Bharat / bharat

தளவாடத் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! - காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவின் கூட்டறிக்கை

டெல்லி: பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து 41 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் குழு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

41 தளவாடத் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

author img

By

Published : Oct 10, 2020, 3:37 AM IST

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டில் 41 இடங்களில் ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

பாதுகாப்புத் துறையின் இந்தத் ராணுவத் தொழிற்சாலைகளை அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைந்த பங்களிப்பு முறையில் செயல்படுத்த கடந்தாண்டு மத்திய அரசின் நிதி ஆயோக் ஆலோசனை அளித்திருந்தது.

இதனையடுத்து, தொழிற்சாலைகளை படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.

இந்த 41 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் 600 விதமான பொருள்களில் 200 பொருள்களைத் தயாரிக்கும் பணியை அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டத்தின் தனியாரிடம் ஒப்படைத்துள்ளதால் தற்போது இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் அடங்கிய குழு கூட்டறிக்கை ஒன்றை எழுதியுள்ளது.

அதில், "பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து 41 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

41 பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிற்சாலைகளை தனியார்மயமாக்குவது, அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் வழியில் மாற்றம் கொண்டுவருவது போன்ற அரசின் முடிவுகள் நாட்டின் பாதுகாப்பு கொள்கையை நீர்த்துப்போகச் செய்யும்.

இந்திய தேசிய பாதுகாப்பு நலனில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் 'மேக் இன் இந்தியா', 'ஆத்ம நிர்பார் பாரத் மிஷன்' போன்ற திட்டங்களை அறிவித்த மத்திய அரசு தற்போது அவற்றுக்கு முரணாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எதிர்மறை தாக்கங்களை விளைவிக்கும்.

இந்தியா முழுவதும் உள்ள 41 பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் ஊழியர்கள் ஒரு மாத கால வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு செவிமடுக்க வேண்டும்.

பாதுகாப்புத் துறையில் கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள துடிக்கும் மத்திய அரசு, அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கூட்டறிக்கையில் காங்கிரஸ் கமிட்டியின் மூத்தத் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், விவேக் தங்கா, மணிஷ் திவாரி, சசி தரூர் ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.