ETV Bharat / bharat

காசிரங்கா வெள்ளத்திற்கு கவலை தெரிவித்த பிரிட்டன் அரச தம்பதி!

கௌஹாத்தி: அசாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தின் காரணமாக காசிரங்கா பூங்கா சந்தித்துள்ள பாதிப்பு தங்களுக்கு வருத்தமளிப்பதாக பிரிட்டன் அரச தம்பதியினர் கடிதம் எழுதியுள்ளனர்.

அசாம்
அசாம்
author img

By

Published : Jul 25, 2020, 12:24 PM IST

அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டு, ஒட்டுமொத்த மாநிலமும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக சுமார் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்கா பெரும் சீரழிவைச் சந்தித்துள்ளது.

காசிரங்கா பூங்காவின் 92 விழுக்காடு பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில், 12 காண்டாமிருகம் உட்பட 123 விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. இந்தச் சம்பவத்திற்குக் கவலை தெரிவித்து, பிரிட்டன் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்ட்டன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், ”2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் காசிரங்கா தேசிய பூங்கவைப் பார்வையிட்ட மகிழ்ச்சியான நினைவுகள் எப்போதும் உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடர் கவலை தருவதாக உள்ளது. இத்தனை விலங்குகள் அழிந்தது பெரும் துயரத்தை அளிக்கிறது. பூங்காவில் பணி செய்யும் ஊழியர்கள் அனைவரும் அர்பணிப்புடன் உழைக்கக் கூடியவர்கள். இந்தத் தருணத்தில் அவர்கள் அனைவரையும் நெஞ்சார நினைத்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச தம்பதியினர் கடிதம்
அரச தம்பதியினர் கடிதம்

அரசக் குடும்பத்தின் இந்தக் கடிதம் தங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிப்பதாக காசிரங்கா பூங்காவின் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.