ஆம்பன் புயல் காரணமாக கடுமையான பாதிப்பைச் சந்தித்த மேற்குவங்க மாநிலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிடுகிறார். நாளை காலை 10 மணி அளவில் கொல்கத்தா விமான நிலையத்திற்கு வருகைதரும் அவர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் இணைந்து புயல் பாதிப்பிற்குள்ளான இடங்களை விமானம் மூலம் பார்வையிடுகிறார்.
புயல் காரணமாக அம்மாநிலத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்த நிலையில், அவசர நிதியாக ரூ.1,000 கோடியை முதலமைச்சர் மம்தா ஒதுக்கியுள்ளார்.
கரோனா பேரிடரை நாடு சந்தித்துவரும் சூழலில் பிரதமர் மோடியின் இந்த உடனடிவருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தன்னிறைவை நோக்கியது 'நியாய்' திட்டம் - சோனியா காந்தி பெருமிதம்