தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் மோடி வழக்கம்போல் இம்முறையும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திற்குச் சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களைச் சந்தித்து தன் வாழ்த்துகளை தெரிவித்தார். நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
பாகிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 1947ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இந்திய ராணுவம் காஷ்மீருக்குச் சென்றது. இந்த நாளை காலாட்படை நாளாக இந்திய ராணுவம் கொண்டாடிவருகிறது. இதனை நினைவுகூறும் விதமாக ராணுவ வீரர்களின் நினைவகத்திற்குச் சென்று மோடி மரியாதை செலுத்தினார்.
இதேபோல், மோடி 2014ஆம் ஆண்டு சியாச்சின் பனிமலைக்கும் 2015ஆம் ஆண்டு பஞ்சாபிற்கும் மோடி சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். 2016ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்திற்கும் 2017ஆம் ஆண்டு வடக்கு காஷ்மீருக்கும் 2018ஆம் ஆண்டு உத்தரகாண்டிற்கும் சென்று அவர் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #SaveSurjith மீண்டு வா சுர்ஜித்! - முதன்மை தகவல்கள் உடனுக்குடன்