ETV Bharat / bharat

'கடவுளுக்கே முகமூடி' - பிரதமர் மோடி தொகுதியில் சிவனுக்கு வந்த சோதனை!

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு முகமூடி போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Nov 7, 2019, 7:03 PM IST

Modi

வடமாநிலங்களில் காற்று மாசு சிக்கல் அதிகரித்துள்ள நிலையில் வாரணாசியில் உள்ள சிவனுக்கு அங்குள்ள அர்ச்சகர்கள் முகமுடி அணிவித்துள்ளனர். நாடு முழுவதும் காற்று மாசு பிரச்னை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் ஏற்படும் மாசானது, வடமாநிலங்கள் முழுவதும் பரவி வருகிறது. அவசர நிலை அளவிற்கு மோசமடைந்துள்ள இந்த சிக்கலைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் தரப்படுகிறது.

இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் விரைந்து செயல்படுமாறு எச்சரித்துள்ளது. இதற்கிடையே உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள துவாரகேஷ்வர் மகாதேவ் ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்திற்கு அங்குள்ள அர்ச்சகர்கள் முகமூடி அணிவித்துள்ளனர்.

காசி நகரில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசின் காரணமாக இந்த ஏற்பாட்டை அவர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அர்ச்சகர் அலோக் மிஸ்ரா, 'காற்று, மாசு, குளிர் போன்ற பிரச்னையிலிருந்து இறைவனைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை. மாசின் காரணமாகப் பலரும் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்’ என வருந்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி காற்று, மாசு சிக்கலைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாநில மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாட்டின் பிரதமர் தொகுதியில் கடவுளுக்கே ஏற்பட்டுள்ள, இந்த சோதனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க:'எச்1பி விசா மறுப்பு, மோடிக்கு கிடைத்த வெற்றி' - பிரியங்கா காந்தி கிண்டல்!

Intro:Body:

UP: Priest covers 'Shivling' with mask as air quality worsens in Varanasi

https://www.aninews.in/news/national/general-news/up-priest-covers-shivling-with-mask-as-air-quality-worsens-in-varanasi20191107142839/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.