கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சர்வஜனா பள்ளியில் படித்து வந்தவர் ஷேக்லா ஷெரீன். இவர் பள்ளி வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு ஒன்று கடித்தது. இதையடுத்து வலியால் துடித்த ஷெரீனை ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஷெரீன் பரிதாபமாக உயிரிழந்தார். ஷெரீனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவ-மாணவர்கள் ஷெரீனின் மரணத்துக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் மாநில கல்வி துணை பொது இயக்குனர் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகியோரை பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : பாசமான மணியனை குத்திக் கிழித்த யானைக் கூட்டம்!