ETV Bharat / bharat

வரி விதித்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது சரியல்ல!

பெட்ரோல்-டீசலின் விலை பல குறிப்பிட்ட காரணிகளைப் பொறுத்தது. இந்த விலை தினமும் காலை 6 மணிக்கு நிர்ணயிக்கப்படுகிறது. மாறும் எரிபொருள் விலை முறையில் எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் அது ஒவ்வொரு நாளும் மாறுகிறது. இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை மட்டுமே சார்ந்தது அல்ல என பொருளாதார நிபுணர் பேராசிரியர் சுமன் முகோபாத்யாய் கூறியிருக்கிறார்.

author img

By

Published : Jul 3, 2020, 8:04 AM IST

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

கொல்கத்தா: எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (ஓஎம்சி) ஜூலை 3ஆம் தேதி மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் வைத்திருந்தன. ஜூன் 7 முதல், பெட்ரோல் விலை ரூ.9.17 ஆகவும், டீசல் ரூ.11.14 ஆகவும் அதிகரித்துள்ளது.

மற்ற நகரங்களிலும் விலையேற்ற அளவானது ஒத்திருந்தது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏன் தினமும் உயர்ந்து கொண்டிருந்தது என்ற கேள்வி மக்களுக்கு எழாமல் இல்லை?

2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தை வகுத்தது. அதனை 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தவுடன் செயல்படுத்தியது.

தரவுகளின்படி, 2008 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை மிகவும் உயர்ந்தது. அந்த நேரத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 132 டாலராக இருந்தது. அந்த சமயத்தில் பெட்ரோல் விலை ரூ.50 க்கும் மேல் இல்லை.

தரவுகளின்படி, என்.டி.ஏ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 2014 ஜூன் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 109 டாலராக இருந்தது. அந்த நேரத்தில் கொல்கத்தாவில் டீசல் லிட்டருக்கு ரூ.62 ஆகவும், பெட்ரோல் ரூ. 79 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை மிகவும் உயர்ந்தது. அந்த நேரத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 132 டாலராக இருந்தது. அந்த சமயத்தில் பெட்ரோல் விலை ரூ.50 க்கும் மேல் இல்லை.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து வல்லுநர்கள் என்ன நினைக்கிறார்கள்?

மேற்கு வங்க பெட்ரோல்-டீசல் சங்க செயலாளர் சுர்ஜித் கோல் கூறுகையில், "இந்த நேரத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 40 டாலராக உள்ளது. பொதுமுடக்கத்தின் போது, ஒரு பீப்பாய்க்கும் கீழாக கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.

பின்னர் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து பீப்பாய்க்கு 40 டாலரை எட்டியது. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வரும் அளவுக்கு இங்கு பெட்ரோல்- டீசலில் விலை அதிகரிக்கவில்லை. எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருகிறது எனும் மத்திய அரசின் வாதம் சரியானதல்ல.

1. இதுவரை பெட்ரோல் டீசல் ஆகிய இரண்டுமே, மத்திய அரசின் தொலை நோக்கு வரி திட்டமான ஜிஎஸ்டிக்குள் வரவில்லை. காரணம் பெட்ரோல் டீசலில் இருந்து வரும் கணிசமான வருவாய்.

2. கலால் வரி மற்றும் மாநில வாட் வரியை உயர்த்துவது. இந்த இரண்டை வைத்து அரசாங்கங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறையவிட மாட்டார்கள்

பெட்ரோல் - டீசல் விலை நிர்ணயம்

இதுகுறித்து பேசிய பொருளாதார நிபுணர் பேராசிரியர் சுமன் முகோபாத்யாய், நாம் நாள்தோறும் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50 விழுக்காடு பணத்தை வரிக்காக மட்டும் செலுத்துகிறோம்; அந்த வரிகள் நீக்கப்பட்டால் விலையானது பாதியாகக் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, 1 லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் என்று வைத்து கொண்டால், முகவர்கள் 47 ரூபாய்க்கு வாங்குகின்றனர். அதில் கமிஷன் 5 ரூபாய் – மொத்தம் ரூ.52; பின்னர் மத்திய அரசு ரூ.27 வரியாக விதிக்கிறது; மாநில அரசு ரூ.21 வரியாக விதிக்கிறது. அதாவது வரியாக மட்டும் ரூ.48 விதிக்கப்படுகிறது. இதனை நுகர்வோரே அதாவது மக்களே செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதில் கலால் வரி மட்டும் ஏறக்குறைய ரூ.20 வரை வசூலிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 9 முறை கலால் வரி உயர்த்தப்பட்டும், 1 முறை மட்டும் குறைக்கப்பட்டும் உள்ளது. பலமுறை கலால் வரி உயர்த்தப்பட்ட போது , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தே காணப்பட்டது.

ஆனால் அப்போது கூட பெட்ரோலியம் மீதான வரியோ, ஒட்டுமொத்த விலையோ குறைக்கப்படவில்லை.

வரி விதித்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது சரியல்ல!

பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லையா என வினவினால், வாய்ப்பிருக்கிறது ஆனால் அது அரசியல்வாதிகள் கையில் இருக்கிறது என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

அதாவது இந்தியா மற்ற நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.29, சுத்திகரிப்பு, போக்குவரத்து செலவு என அது 7-9 ரூபாய் சேர்க்கப்படும். இவற்றை சேர்த்து முகவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.35 அல்லது ரூ.37க்கு விற்கப்படும். ஆனால் நுகர்வோரின் கைக்கு கிடைக்கும் போது அதன் தற்போதைய விலை குறைந்தபட்சம் ரூ.70-ல் இருந்து ரூ.80 ஆக மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு கிடைக்கிறது.

இதனை ஒழுங்குப்படுத்துவது எப்படி

அதாவது ஏறக்குறைய ரூ.35- 40 வரை வரியாக மட்டும் செலுத்தும் நிலை இருக்கிறது. இதனை குறைத்தால் பெட்ரோல், டீசலை இந்திய நுகர்வோரும் குறைந்த விலைக்கு வாங்க முடியும். அதற்கு பெட்ரோலிய பொருள்களுக்கு ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட வேண்டும் அல்லது வரி குறைக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: கோவிட் - 19 காலத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வழிமுறைகள் - ஒருபார்வை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.