ETV Bharat / bharat

பத்திரிகை தகவல் மையத்தின் தலைவருக்கு கரோனா - பிஐபி

டெல்லி: பத்திரிகை தகவல் மையத்தின் முதன்மை இயக்குநர் கே. எஸ். தத்வாலியாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தத்வாலியா
தத்வாலியா
author img

By

Published : Jun 8, 2020, 1:17 PM IST

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாட்டில் இதுவரை 2,56,611 பேர் வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகம், அமலாக்கத்துறை தலைமையகம் ஆகியவற்றில் பணிபுரிந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பத்திரிகை தகவல் மையத்தின் முதன்மை இயக்குநர் கே. எஸ். தத்வாலியாவுக்கு கரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். முன்னதாக, மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவதேகர் கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தத்வாலியா அவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டார்.

தத்வாலியாவின் உடல்நிலை குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை. பத்திரிகை தகவல் மைய அலுவலகம் அமைந்துள்ள தேசிய ஊடக மையம் தற்போது மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளையும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என்பதால், செய்தியாளர்கள் சந்திப்பு சாஸ்திரி பவனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோரக்பூர் சிவாலயத்தில் யோகி ஆதித்யநாத் வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.