ETV Bharat / bharat

'ஷாஜகான் - மும்தாஜ் காதல் கதையைக் கேட்டு ட்ரம்ப் புல்லரித்துப்போனார்'

டெல்லி: மன்னர் ஷாஜகான் - மும்தாஜ் காதல் கதையைக் கேட்டு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியாவும் புல்லரித்துப் போனதாக, அவர்களுக்கு வழிகாட்டியாக (கைடு) செயல்பட்ட நித்தின் சிங் தெரிவித்தார்.

author img

By

Published : Feb 25, 2020, 12:51 PM IST

trump taj mahal tour, தாஜ் மஹால் சுற்றுலா
trump taj mahal tour

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவங்கா, மருமகன் ஜாரட் குஷ்னர் நால்வரும் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளனர்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்திறங்கிய அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார். பின்னர், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்த மொதேரா கிரிக்கெட் மைதானத்தில் உரையாற்றினார்.

இதையடுத்து, மாலையில் விமானம் மூலம் ஆக்ரா சென்ற ட்ரம்ப், குடும்பத்துடன் தாஜ் மஹாலை சுற்றிப் பார்த்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியாவுக்கு வழிகாட்டியாக (கைடு) செயல்பட்டவருமான நித்தின் சிங், அவரது அனுபவம் குறித்து ஈ டிவி பாரத் ஊடகத்திடம் பேசினார்.

அப்போது, "தாஜ் மஹாலைப் பார்த்தவுடன் அவர்கள் கூறிய முதல் வார்த்தை 'Incredible' (வியக்கத்கத்தது). தாஜ் மஹால் குறித்தான அனைத்து தகவல்களையும்; நான் அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

அதன் கலையழகைக் கண்டு இருவரும் வியந்தனர். மன்னர் ஷாஜகான், அரசி மும்தாஜ் ஆகியோரின் காதல் கதையைக் கேட்டு, அவர்களுக்கு புல்லரித்துப்போனது.

எதிர்காலத்தில் மீண்டும் தாஜ் மஹால் வருவோம் என என்னிடம் வாக்குறுதியளித்தனர்" என்றார்.

இதையும் படிங்க : கொரோனா பீதி: நாளை சீனா செல்லும் இந்திய மீட்பு விமானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.