சந்திப்பு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாட்கள் பயணமாக குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் இன்று காலை, காந்தி நகர் அருகேயுள்ள ராய்சன் கிராமத்துக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னை சந்தித்து பேசினார்.
அவருக்கு ஆசீர்வாதம் வழங்கிய ஹீரா பென், அண்ணல் காந்தி அடிகளின் நினைவாக ராட்டை உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி உடனிருந்தார்.
ஆசீர்வாதம்
இதையடுத்து ராம்நாத் கோவிந்த், கோபா கிராமத்தில் உள்ள ஜெயின் ஆராதன கேந்திரா கோயிலுக்கு செல்கிறார். அங்கு ஆன்மிக குரு ஆச்சார்யா ஸ்ரீ பத்மசாகர் குருஜியை சந்தித்து ஆசீர்வாதம் பெறுகிறார். மேலும் அக்கோயிலில் உள்ள அருங்காட்சியகத்தை சுற்றி பார்கிறார். அங்கிருக்கும் நூலகத்துக்கும் செல்கிறார்.
ஜெயின் கோயிலில் உள்ள அருங்காட்சியகம் பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. இங்கு பழங்கால கையெழுத்து பிரதிகள், ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் தொல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: