சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவல், கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து குடியரசுத் தலைவரும், குடியரசு துணைத் தலைவரும் ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார்.
இதையும் படிங்க..."ஏப்ரல் 5 இல் 9 நிமிடங்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுங்கள்" பிரதமர் மோடி வேண்டுகோள்