மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மாகாண (பிரெசிடென்சி) கல்லூரி மாணவர்கள் நேற்றிரவு (மார்ச் 5) கைகளில் பதாகைகளுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “பல்கலைக்கழகத்தின் விடுதியில் எட்டு சாதாரண ஊழியர்கள் அரசின் அலுவலர்களால் எதேச்சதிகாரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை நாங்கள் எதிர்க்கிறோம். மேலும் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. இந்து விடுதி பாழடைந்து காணப்படுகிறது.
வியாழக்கிழமை இரவு இங்குள்ள பிரசிடென்சி பல்கலைக்கழக மாணவர்கள், நகரத்தின் தமனி எம்.ஜி. சாலை-கல்லூரி வீதி குறுக்கு வழியைத் தடுத்து, பல்கலைக்கழகத்தின் இந்து விடுதிகளின் பாழடைந்த மூன்று வார்டுகளை விரைவாக புதுப்பிக்க வேண்டும் என்று கோரினர்.
இது தொடர்பாக துணைவேந்தர் (வி.சி) அனுராதா லோஹியாவை சந்திக்க வேண்டும்” என்றனர். மாணவர்களின் தர்ணா போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளைப் பேட்டி எடுத்து ஊக்குவிக்க வேண்டாம் - டெல்லி உயர் நீதிமன்றம்