நாட்டின் நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 4.8 ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இதையடுத்து, சர்வதேச நிதியத்தின் தலைவரான கீதா கோபிநாத்தை பாஜக அமைச்சர்கள் விமர்சித்து கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் வளர்ச்சி 4.8 ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான். வளர்ச்சி இதைவிட குறைவாக இருந்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன்.
பணமதிப்பிழப்பை முதன்மையாக விமர்சித்த ஒரு சிலரில் கீதா கோபிநாத்தும் ஒருவர். அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து கருத்து கூறும் பொருளாதார வல்லுநர்களை பாஜக அமைச்சர்கள் விமர்சிப்பது வழக்கமாகிவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாட்டின் வளர்ச்சி 6.1 ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்திருந்தது.
-
Reality check from IMF. Growth in 2019-20 will be BELOW 5 per cent at 4.8 per cent.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Reality check from IMF. Growth in 2019-20 will be BELOW 5 per cent at 4.8 per cent.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 21, 2020Reality check from IMF. Growth in 2019-20 will be BELOW 5 per cent at 4.8 per cent.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 21, 2020
இதையும் படிங்க: 'விலங்குகள்போல குழந்தைகள் பெற்றுக்கொள்வது நாட்டுக்கு தீங்கு'