பரபரப்பான சாலையில் அனைவரும் சிக்னலில் நின்று கொண்டிருக்க அவர்களுடன் சேர்ந்து மாடு ஒன்றும் சிக்னலுக்காக காத்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையடுத்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ’மனிதர்களாகிய நாம் மாட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டு, மாடு சிக்னலில் நின்று கொண்டிருந்த வீடியோவைப் பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார். இது பலராலும் அதிக லைக் மற்றும் ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
மாடு சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த வீடியோவை இணையவாசிகள் தொடர்ந்து பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலகிருஷ்ணாவின் தசரா போஸ்டரால் குழப்பம்!