கர்ப்பிணி
ஒடிசா மாநிலம் மயூர்பான்ஞ் மாவட்டத்தில் உள்ள ஹன்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சித்தாரஞ்சன் முண்டா. இவரின் மனைவி துளசி. நிறைமாத கர்ப்பிணியான இவர், பங்கிகிபோசி ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு அவரின் உடல் நிலை மோசமானதால், குழந்தையை பிரசிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அவரை உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அரசு ஆம்புலன்ஸ் மூலம், அவரை பண்டிட் ரகுநாத் மும்ரு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்றது.
உயிரிழப்பு
அதன்பின், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எவ்வளவு முயன்றும் மாற்று ஏற்பாடு கிடைக்கவில்லை. இதற்கிடையில், ஆம்புலன்சில் இருந்த கர்ப்பிணி துளசியின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில் அவர், ஆம்புலன்சிலே மரணித்தார். அவருடன் ஏதுமறியா பிஞ்சு சிசுவும், இவ்வுலகத்தை காணாமலே மரணித்து போனது. இதுபோன்ற பரிதாபமான சம்பவங்கள் நடப்பது ஒடிசாவில் இது முதல்முறையல்ல.
இதையும் படிக்கலாமே
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி; சாலை இல்லாததால் நேர்ந்த சிரமம்!
பழங்குடியின மாணவர்களின் கல்வியை கேள்விகுறியாக்கிய ஃபானிபுயல்!