முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான பிரணாப் முகர்ஜி (வயது 84), கடந்த 9ஆம் தேதி இரவு தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார்.
இதனையடுத்து, தொடர்ச்சியாக அவருக்கு தலைசுற்றலும், இடது கையில் உணர்ச்சியற்ற நிலையும் நீடித்ததாக அறிய முடிகிறது.
இந்நிலையில், 10ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதனிடையே, அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் மூளையில் இருந்த ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றிரவே அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக அவரது உடல் நிலை முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
-
Yesterday , I had visited my Father In Hospital . With God's grace & all your good wishes , He is much better & stable than D preceeding days! All his vital parameters are stable & he is responding to treatment ! We firmly believe that He will be back among us soon
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank You🙏
">Yesterday , I had visited my Father In Hospital . With God's grace & all your good wishes , He is much better & stable than D preceeding days! All his vital parameters are stable & he is responding to treatment ! We firmly believe that He will be back among us soon
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 16, 2020
Thank You🙏Yesterday , I had visited my Father In Hospital . With God's grace & all your good wishes , He is much better & stable than D preceeding days! All his vital parameters are stable & he is responding to treatment ! We firmly believe that He will be back among us soon
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 16, 2020
Thank You🙏
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்பாக இன்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் என் தந்தையை நேற்று (ஆகஸ்ட் 15) நேரில் சந்தித்தேன். கடவுளின் ஆசியுடனும், உங்களைப் போன்ற எல்லோரின் நல்வாழ்த்துகளுடனும் அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார். அவருடைய முக்கிய அளவுருக்கள் அனைத்தும் சீரான நிலையை அடைந்துள்ளன.
அவரது உடல் இப்போது சிகிச்சைக்கு உரிய வகையில் முன்னேறியுள்ளது. அவர் மீண்டு வருவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விரைவில், எங்களிடையே திரும்பி வாருங்கள் அப்பா. நன்றி" என்று அதில் கூறியுள்ளார்.