ETV Bharat / bharat

கள பணியாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது - பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: கரோனாவை எதிர்த்து போராடும் கள பணியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தால், அதனை பொறுத்துக்கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

prakash
prakash
author img

By

Published : Apr 24, 2020, 12:20 PM IST

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினர் தன்னலமற்று செயல்பட்டுவருகின்றனர். இருப்பினும், இவர்கள் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது.

இவர்களிடமிருந்து வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக வதந்தி பரவியதே இதற்கு காரணம். இதனிடையே, இவர்கள் மீது தாக்குதல் தொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வழி செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கள பணியாளர்களை பாராட்டும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "கள பணியாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது. எனவேதான் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அச்ச உணர்வின்றி தன்னலமற்று அவர்கள் போராடிவருகின்றனர். கரோனாவை தோற்கடித்து இந்தியா வெல்லும்" என குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர், பொதுமக்கள் என 40 பேரின் கையொப்பம் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ளது. மருத்துவப் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், தபால் துறை ஊழியர்கள் போன்ற கள பணியாளர்களிடம் இந்தக் கடிதம் கொடுக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: இனி மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை, 5 லட்சம் வரை அபராதம்: மத்திய அரசின் அவசர சட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.