வான்சித் பகுஜன் அகாதி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அரசிடம் சரணடைய விருப்பம் தெரிவித்த சமயத்தில் மகாராஷ்டிரா மாநிலம் முதலமைச்சராக இருந்த சரத் பவார் அதனை தவிர்த்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தாவூத், மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி மூலம் சரணடைய விரும்பியபோது சரத் பவார் பிரதமரிடமோ, உளவுத் துறையிடமோ ஆலோசித்தாரா அல்லது தானாக முன்வந்து முடிவு ஏதேனும் எடுத்தாரா என கேள்வியெழுப்பிய அவர், அதனை மக்கள் அறிய விரும்புகிறேன் என தெரிவித்தார்.
அன்றைக்கு தாவூத்தை கைது செய்திருந்தால் பல குண்டுவெடிப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
பிரகாஷ் அம்பேத்கர் மகாராஷ்டிரா மாநிலம் மக்களவைத் தேர்தலில் எ.ஐ.எம்.ஐ.எம். தலைவரும் ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான ஒவைசியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட உள்ளார்.