17ஆவது மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடக மாநில பாஜக முன்னாள் தலைவர் பிரகலாத் ஜோஷி மத்திய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.