இது தொடர்பாக பேசிய அவர், "பயங்கரவாதம் கோலூன்றி நின்ற காலம் அது. சிறுபான்மையினர் அடித்து ஒடுக்கப்பட்டனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். அப்போது மாநிலத்தில் நிலவிய பிரச்னைகளை தீர்க்க முடியாத காங்கிரஸ், இந்து பயங்கரவாதம் தான் இதற்கு காரணம் என தெரிவித்தது. அதுமட்டுமின்றி மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிலரை விடுவித்து, பிரக்யாவை கைது செய்ய உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கிலிருந்து பிரக்யா விடுவிக்கப்பட்டார். இந்துக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் பிரக்யா சிங் தாகூர் மக்களவைத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்", என தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் பிரக்யா சிங் தாகூர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.