ETV Bharat / bharat

கரோனா வெறியாட்டம்: பன்னாட்டு உறவுகள், புவி அரசியலில் மாற்றம் வருமா?

author img

By

Published : Apr 28, 2020, 3:24 PM IST

கரோனா சூழலால் பன்னாட்டு உறவுகள், புவி அரசியலில் மாற்றம் வருமா? என்பது குறித்து இந்திய ராணுவத்தின் முன்னாள் துணை தளபதி டி எஸ் ஹூடா விவரித்துள்ளார். அதுபற்றிய தொகுப்பு...

Power struggles set to intensify in post COVID-19 world

கரோனா நெருக்கடியிலிருந்து மீண்டுவர உலக நாடுகள் போராடி வரும் சூழலில், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி எழுந்துள்ள கேள்விகள் பல. ஆனால், அறுதியிட்டு விடையளிக்க முடியாத கேள்விகள். அவற்றுள் மிக முக்கியமானது, இந்தக் கொடிய பெருந்தொற்று பன்னாட்டு உறவுகளிலும், குறிப்பாக புவி அரசியல் போக்கிலும் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்னவென்பதே. கண்ணுக்குப் புலப்படாத பொது எதிரியான கரோனா தற்போதைய போர், பன்னாட்டு உறவில் அண்மைக்காலமாக நாம் கண்டிராத, ஒரு புதிய உலக ஒழுங்கமைவை, முறைமையை உருவாக்குமா?

பாரதூர அளவில் முன்னேற்றப் பாதையை நோக்கிய மாற்றம் எதுவும் நடக்காது என்பதே இந்த கேள்விக்கான பதிலாக அமைவது துரதிர்ஷ்டவசமானது. இதற்கு நேரெதிராக, கடந்த பத்தாண்டுகளில் நம் கண்ணெதிரே வெளிப்பட்ட புவி அரசியல் போக்கே அதிக வீச்சோடு மேலும் வலுவாக தொடரவிருப்பதுதான் உலகில் உள்ள யதார்த்தம். சமீப காலங்களில் தோன்றி வலுப்பெற்றுவரும் தேசியத்தின் எழுச்சி மற்றும் ‘தேசமே முதன்மை’ என்ற கொள்கைகளின் விளைவாக உலகமயமாக்கல் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. தேசங்களின் எல்லைகள் மூடப்பட்டு தற்போது முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. மூடப்பட்ட எல்லைகள் கூடிய விரைவில் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அதற்கான வாய்ப்பும் அருகி வற்றிப்போயுள்ளது. இது, புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பேரிடியாக அமையும். குறிப்பாக, போரின் பிடியிலிருந்தும், வன்முறை வெறியாட்டத்தில் இருந்தும் தப்பிப் புகலிடம் தேடி அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கான வேலை வாய்ப்பு வேண்டி முன்னேறிய மேலை நாடுகளுக்குச் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுவர்.

இந்நிலையில், பன்னாட்டு அமைப்புகளும் சர்வதேச நிறுவனங்களும் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது கவலைக்குறிய விஷயமாகும். வல்லரசு நாடுகளின் தன்னிச்சையான தொடர் நடிவடிக்கைகளால் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துள்ள ஐக்கிய நாடுகள் அவை போன்ற அமைப்புகள், இன்னும் மிச்ச சொச்சம் இருக்கும் செல்வாக்கையும் பறிகொடுக்கும் பரிதாப நிலையே தற்போது உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்திற்கு தான் அளிக்கவேண்டிய நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள செயலானது, தனிப்பட்ட ஒரு நிகழ்வன்று. அந்நாட்டின் தொடர் செயல்பாடுகளின் மேலும் ஒரு பகுதியே ஆகும். முன்னதாக, பாரிஸ் பருவநிலை மாற்ற பன்னாட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதும், யுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகியதும் நினைவுகூரத்தக்கது. இதில் ரஷ்யாவும் சீனாவும் விதிவிலக்குகளல்ல. தன் பங்கிற்கு, ரஷ்யா சர்வதேச நீதிமன்றத்திலிருந்து விலகியது. ஐ.நா தீர்ப்பாயத்துடன் ஒத்துழைக்க மறுத்து, தென்சீனக் கடல் பகுதியில் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள வழக்கில் அந்த தீர்ப்பாயத்தின் 2016-ஆம் ஆண்டு உத்தரவை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. மிகவும் வலுவான பொருளாதார ஒன்றியமான ஐரோப்பிய ஒன்றியமே, கரோனாவால் பேரிழப்பை சந்தித்த இத்தாலிக்கும் பிற உறுப்பு நாடுகளுக்கும் ஏதும் செய்யவில்லை, உதவிக்கரம் நீட்டவில்லை.

சர்வதேச விவகாரங்களில் கையாளப்படும் கொள்கை நெறிமுறையாக விளங்கிய ‘லிபரல்’ கோட்பாடு கைவிடப்பட்டு காலாவதியாகிவிட்டதா என கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. காரணம், வல்லரசுகள் கடிவாளமற்ற சட்டாம்பிள்ளைகளாக வலம்வருவதே. இந்த சூழலில், உலக அமைதியை உறுதிசெய்யும் ஜனநாயகம், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர பொருளாதார சார்பு ஆகியன இன்றைய காலகட்டத்தில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. மாறாக ’யதார்த்தவாத’ கோட்பாடு, சர்வதேச அமைப்பே குழப்பமயமானது என்று இகழ்ந்து, இறையாண்மை உள்ள தேசங்களே பன்னாட்டரங்கில் முதன்மையானவை என வாதிடுகிறது. இது வல்லரசுகளுக்கான வக்காலத்து அன்றி வேறில்லை. மேலும், வலுவான அதிகாரமிக்க சர்வதேச அமைப்பு இல்லாத சூழலில், பல நாடுகளும் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் உயர்த்திக்கொள்ள இடையாறாது செயல்படுகின்றன.

இன்றைய உலகைச் சுற்றிக் கண்ணோக்கும்பொழுது, குறிப்பாக கோவிட் தொற்று முடிவடைந்த எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க முற்படுகையில், நிலவும் அதிகாரப் போட்டி முகத்தில் அறைந்தாற்போல வெளிப்படுகிறது. பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தலைவிரித்தாடும் இந்த அதிகாரப் போட்டி, மேலும் மேலும் தீவிரமடையுமே அன்றி குறையப்போவதில்லை. வரலாறு காணாதவகையில் வீழ்ச்சி அடைந்துவரும் கச்சா எண்ணெய் விலை, வளைகுடா பிராந்தியத்தில் அரசியல் பொருளாதார ஸ்திரத்தண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளான ஈரான், ஈராக் ஆகியன இதனால் வலுவிழந்து போகலாம். இத்தகைய சூழல், தீவிரவாதம் மற்றும் மதவாதத்திற்கு நாற்றங்கால் ஆகும் அபாயமும் உண்டு. குறிப்பாக, தரமான மருத்துவ உள்கட்டுமானம் இன்றி இந்த கொடூர பெருந்தொற்றின் தாக்கத்தையும் அதன் தீவிரத்தையும் முறையாக கையாண்டு தடுத்து மீள இயலாத நாடுகள் தீவிரவாதத்திற்கு எளிதில் இரையாகலாம்.

பிராந்திய அளவிலான போட்டி மட்டுமன்றி, வல்லரசுகளுக்கு இடையேயான உரசலும் போட்டியும் தன்முனைப்பும் மேலும் தீவிரமடையும். அமெரிக்காவுக்கும் – சீனாவுக்கும் இடையே வெடித்துள்ள வர்த்தைப் போர் நாம் பார்த்துவருவதுதான். வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் குறித்த தகவலை சீனா மூடிமறைத்ததாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கரோனாவின் தீவிர தாக்கம் பற்றி தெரிந்தே செயல்பட்டிருந்தால் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ட்ரம்ப்பின் அதிரடி எச்சரிக்கை, சர்வதேச அரங்கில், சீனா மீதான சந்தேகப் புயலை வலுப்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித்தள்ளிய சீனா, தனக்கு எதிரான பிரசாரத்துக்குப் பதிலடி கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது. வைரஸ் பரவலை தான் எவ்வாறு திறமையாக கையாண்டு வெற்றிகண்டது என்ற தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளதோடு, தனது மெல்லிய அதிகார இருப்பைத் தக்கவைத்து உறுதிப்படுதிக் கொள்ளும் முகமாக, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் மட்டும் இன்றி ஆசிய நாடுகளுக்கும் மருத்துவ உதவி அளித்து வருகிறது.

அமெரிக்க-சீன உறவின் தன்மையும் போக்குமே 21-ம் நூற்றாண்டின் அடிநாதமாக அமையும் என்று பரவலாக பேசப்பட்டதுடன் வல்லுநர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால், கரோனா வைரஸ் பரவலின் பின்புலத்தில், அமெரிக்கா பெருந்தொற்றின் வேட்டைக் காடாக மாறியுள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, முன்னெப்போதும் இல்லாத அளவு சரிவை எதிர்கொண்டு அதளபாதாளத்திற்குச் சென்றுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சிங்கப்பூர் லீ குவான் யூ கழகப் பேராசிரியர் ஜேம்ஸ் க்ராப்ட்ரீ கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க-சீன உறவின் மிக மோசமான காலம் இது என்று கூறுகிறார். கடந்த பல பத்தாண்டுகளில், நினைவு தெரிந்த வரை, குறிப்பாக 1970-களுக்குப் பின், இதுவே இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமான ஒரு சரிவை, படு வீழ்ச்சியை சந்தித்துள்ளது என தெரிவிக்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ்.

கரோனா காலத்திலும், இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான போட்டியில் கச்சை கட்டிக்கொண்டு செயல்படுவதை பிற நாடுகள் வேடிக்கைதான் பார்க்க வேண்டியுள்ளது. காரணம், அமெரிக்காவோ, சீனாவோ இத்தகைய நடவடிக்கைகளால் உலக நாடுகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்த இயலவில்லை. இந்த பெருந்தொற்றுக் காலத்தில், அமெரிக்கா தலைமையேற்கத் தவறிவிட்டது. மேலும், கரோனா அதிவேகமாகப்பரவி கொத்துக்கொத்தாக அமெரிக்கர்கள் மடிந்து விழும் சூழலில், வைரஸைக் கட்டுப்படுத்த அந்த நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தெளிவான நோக்கம் இல்லாத தயக்ககமான செயல்பாடுகளாகவே உள்ளன. சீனாவின் நிலையும் பாராட்டும்படி இல்லை. பெரும்பாலான உலக நாடுகள், வைரஸ் பரவலை சாமர்த்தியமாக, திறமையாக கட்டுப்படுத்தியதாக சீனா கூறுவதை நம்பத் தயாரக இல்லை. பல்வேறு வல்லுநர்களும் அறிவியல் ஆவாளர்களும் சீன அரசு வெளியிட்டுள்ள தவலையும் கோரோனா உயிரிழப்பு எண்ணிக்கையையும் குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளனர், ஐயம் தெரிவிக்கின்றனர்.

இந்த தருனத்தில், அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்து, எதிர்காலம் பற்றிய கலக்கத்தில் உறைந்து போயுள்ளன. பன்னாட்டுக் கூட்டுறவும் ஒருங்கிணைந்த செயல்பாடும் இல்லை என்றால், நிச்சயமற்ற பல்துருவ அரசியல் சூழலுக்கு உலகம் தள்ளப்படும் நிலைமை தலைதூக்கும். இந்நிலையில், பெருந்தொற்றை ஓரளவுக்குத் திறம்பட கையாண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு இது நல் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. பிற உலக நாடுகளுக்கு கிட்டாத இந்த வாய்ப்பினை இந்தியா உள்ளிட்ட நாடுகள் திறம்பட பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய துறை, உற்பத்தித் துறை ஆகும். உற்பத்தித் தேவைகளுக்காக, சீனாமீது அதீதமாக சார்ந்திருப்பதின் ஆபத்தை உலகம் தற்போது புரிந்துகொண்டுள்ளது. இதன் விளைவாக, சீனாவிலிருந்து தொழிற்சாலைகள் கூடிய விரைவில் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வது தவிர்க்க இயலாது. ஏற்கனவே, தனது உற்பத்தி நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேற ஜப்பான் 2.2 பில்லியண் டாலர்கள் ஒதுகீடு செய்துள்ளது. இதனை அடியொற்றி, பிற பன்னாட்டு நிறுவனங்களும் சீனாவில் கடையை மூடிவிட்டு வேறிடம் போகலாம். இருப்பினும், தற்போதைய இக்கட்டான சூழலில் பெருமளவு தொழிற்சாலைகளின் வெளியேற்றம் உடனடியாக நிகழ வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். இந்த சூழலின் பின்னணியில், சீனாவில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் இடம்பெற அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய வாய்ப்பினை நழுவ விடாமல், தேவையான கொள்கை மாற்றங்களை கொண்டுவருவதுடன், வேண்டிய சலுகைகள் அளித்து பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வளவு பெரிய உற்பத்தித் துறை இடப்பெயர்வு, பொருளாதார வளர்ச்சிப் போக்கின் ஆட்டத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்றால் மிகையல்ல.

மேலே விவரித்த சூழலின் அடிப்படையில் ஆழ்ந்து பார்க்கும்போது, வருங்காலத்தில் உலகம் எதிர்நோக்கியுள்ள புவி அரசியல் சாத்வீகமான, கருனைவடிவான ஒன்றாக இருக்கப்போவதில்லை. வல்லாதிக்கப் போட்டிகள் பல்வேறு தளங்களில் தீவிரமாக வெளிப்படும். இதனை பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவாக தெரிவித்துள்ளார். பிரபலமான ‘லெ மோண்ட்’ நாழிதழுக்கு அளித்த பேட்டியில், புவி அரசியலின் போக்கு குறித்த துல்லியமான சித்திரத்தைத் தருகிறார் அவர். சர்வதேச அமைப்பு முறையினை பல ஆண்டுகளாகவே நீர்த்துப் போகச்செய்த பிளவுகள், பிரிவினைகள் பூதாகரமாக வெளிப்படுவதையே நாம் பார்க்கிறோம். இந்த பெருந்தொற்று கூட, வல்லரசுகள் இடையேயான போட்டியின் தொடர்ச்சியே. போட்டியின் வடிவம் தான் வேறாக உள்ளது. எனது அச்சம் எல்லாம், இந்த பெருந்தொற்றின் முடிவில் இந்த உலகம் முந்தையது போலவே வலுவாக தோற்றமளிக்கும், ஆனால், இன்னும் மோசமான ஒன்றாகும் என்று தம் அச்சத்தை பகிர்ந்துகொள்கிறார் அவர்.

ஊழித்தாண்டவமென நாளுக்கு நாள் பெருகிவரும் மனித பேரவலத்தினைக் கண்டு, தேச எல்லைகளைக் கடந்து ஒன்றுபட்டு இந்த நெருக்கடியை எதிர்கொண்டு வெல்லவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. இதன் நியாயத்தைப் புறந்தள்ளமுடியாது. ஆனால், எந்த ஒரு தேசமும் தனது சுய பாதுகாப்பு மற்றும் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான போராட்டத்தில் நியாய தர்மங்களோ அற வேட்கையோ குறுக்கிட இடமளிக்காது என்பதே யதார்த்தம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.