சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளர் விருதுகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கினார்.
கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றிய சுய உதவிக் குழுக்கள், கூட்டாட்சி அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 516 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 6,135 பேருக்கு ரூ.31 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள், சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் வங்கி கடன் இணைப்புகளை வழங்கி ஊக்குவிக்கும் வங்கிகளுக்கு, வங்கியாளர் விருதுகள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியே, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மகளிரை கவுரவிக்கும் நிகழ்ச்சிதான்.
ஒரு குழந்தைக்கு பட்டமோ, பரிசோ கிடைத்தால் அதை தன் தாயிடம் சென்றுதான் காட்ட வேண்டும் என ஆசைப்படும். அதே போல் தமிழகத்தின் துணை முதல்வர் என்ற மாபெரும் பொறுப்பை ஏற்ற பின்பு, என்னுடைய தாய்மார்கள், சகோதரிகளை சந்திக்க வந்திருக்கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு அமைந்தது முதல் மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
— Udhay (@Udhaystalin) September 30, 2024
அந்த வகையில், சிறப்பாகச் செயல்பட்டு வரும் 70 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் - வறுமை ஒழிப்புச்… pic.twitter.com/guEJTzfRtI
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்: உதயநிதி VS விஜய்?- இளைஞர் பட்டாளம் யார் பக்கம்? -
தமிழகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் 4.73 லட்சம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 14.91 லட்சம் உறுப்பினர்களை கொண்ட 1.25 லட்சம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான வங்கி கடன் இணைப்பின் இலக்காக ரூ.35 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-2021 வரையிலான 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.84,815 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் திமுக பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.92 ஆயிரம் கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 10 ஆண்டுகால கடன் இணைப்பை விட அதிகமாக திமுக அரசு 3 ஆண்டுகளில் வழங்கியிருக்கிறது.
இதன் மூலம் மகளிர் மேம்பாட்டில் திராவிட மாடல் அரசின் அக்கறையை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இலக்கை விட அதிகமாக கடன் வழங்கி சாதனை படைப்போம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்