ஸ்ரீநகர் (ஜம்மு & காஷ்மீர்): அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததன் மூலம் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு நிலம் வாங்கி ராணுவ முகாம்கள் அமைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
முதலில், ராணுவம் பாரமுல்லா நிர்வாகத்தை அணுகியுள்ளது. வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் பட்டன் பகுதியில் உள்ள தப்பெர்வாரி என்ற இடத்தில் உள்ள கிரீரி உயரமான மைதானத்தில் 129 கனல் (6.5 ஹெக்டேர்) நிலத்தை வாங்குவதில் இந்திய ராணுவம் ஆர்வம் காட்டியுள்ளது.
இந்த பகுதிகளில் இந்திய ராணுவப் படையினர் ஏற்கனவே தற்காலிக முகாம் அமைத்து பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இன்று (மே 30) முடிவதற்குள் பாரமுல்லா மாவட்ட நிர்வாகத்தின் பதிலை இந்திய ராணுவம் கோரியுள்ளது.