ETV Bharat / bharat

ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்குமா காங்கிரஸ்? - காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி

டெல்லி: தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில் தெளிவு கிடைக்கும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் பி.சி. சாக்கோ தெரிவித்துள்ளார்.

Chacko
Chacko
author img

By

Published : Feb 9, 2020, 5:08 PM IST

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பீர்களா என காங்கிரஸ் மூத்தத் தலைவர் பி. சி. சாக்கோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளை பொறுத்தே கூட்டணி (காங்கிரஸ் - ஆம் ஆத்மி) முடிவு செய்யப்படும். இதில், யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. முடிவுகள் வெளியான பிறகே அதைபற்றி யோசித்து விவாதிக்க முடியும். இப்போது வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக உள்ளது. கருத்துக்கணிப்புகள் எப்போதும் சரியாக இருந்ததில்லை என்பது சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் தேர்தலின்போது வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்தது.

பி.சி. சாக்கோ

கருத்துக்கணிப்புகளில் தெரிவிப்பதுபோல் இல்லாமல் காங்கிரஸ் நல்ல வெற்றிபெறும் என நான் நினைக்கிறேன். கருத்துக்கணிப்புகள் சரியான முடிவுகளை வெளியிட்டிருந்தால் பின்னர் தேர்தல் எதற்கு? காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என நான் கூறவில்லை. ஆனால், நல்ல வெற்றி கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி தொகுதியில் பிரியங்கா காந்தி... காங்கிரஸின் அடுத்த மூவ் என்ன?

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/possibility-of-congress-aap-alliance-depends-on-feb-11-results-pc-chacko20200209133606/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.