கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தை அடுத்துள்ள கொட்டியூர் பகுதியிலுள்ள சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கன்சேரி. இவர் அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றையும் நிர்வகித்துவந்தார்.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு 16 வயது சிறுமி ஒருவர், பாதிரியார் ராபின் வடக்கன்சேரி தன்னை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாக புகாரளித்தார். இந்த குற்றச்சாடுகள் வெளியானபோதே ராபின் வடக்கன்சேரி பாதிரியார் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில் ராபின் வடக்கன்சேரி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் அபராதமும் வழங்கி நீதிமன்றம் தீர்பளித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக போப் பிரான்சிஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய கேரள பாதிரியார் ராபின் வடக்கன்சேரி அப்பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாடு பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது - மத்திய உள்துறை அமைச்சர்