புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி குடிநீர் வாரியம் சார்பில் சாலைகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது சாலையின் கீழ் ஐந்து அடி பள்ளம் தோண்டி குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மேல் தார் சாலை போடப்பட்டது.
இந்நிலையில் இன்று காரைக்கால் மாமா தம்பி மரைக்கார் வீதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு குடோனிலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி புதிதாக போடப்பட்ட சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கி, லாரியின் டயர் முழுவதும் உள்வாங்கியது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. குழாய் பதிப்பு பணிக்கு பின்னர் தரமான முறையில் சாலை போடாமல் பெயரளவில் சாலை போடப்பட்டதே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் பெஞ்சமின் தகாத வார்த்தைகளால் பேசினார் - அதிமுக பெண் பிரமுகர் குற்றச்சாட்டு