நாளை (ஆக.15) கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு திடலில் அதற்கான பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. விழாக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை வளாகம் உள்ளிட்ட இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.