ETV Bharat / bharat

டெல்லி மாணவர்கள் தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரி மாணவர்கள் போராட்டம்!

author img

By

Published : Dec 16, 2019, 8:42 PM IST

Updated : Dec 16, 2019, 11:43 PM IST

புதுச்சேரி: டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையை கண்டித்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Puducherry students protest
Puducherry students protest

குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மாபெரும் போராட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில், இந்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தை கைவிடுமாறு கூறியும் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல் துறையினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

தொடர்ந்து, பேரணியாகச் சென்று வளாகத்தினுள் உள்ள இந்தியன் வங்கி அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகத் தங்களது போராட்டம் தொடரும், பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் வருகைதரும்போது தங்களின் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

டெல்லிக்கு ஆதரவாகக் களமிறங்கிய சென்னை...!

Intro:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்Body:புதுச்சேரி 16-12-19
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மாபெரும் போராட்டம் நடைபெறுகின்றது. இந்தநிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.இந்த நிலையில் பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீஸார் மோசமாக தாக்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து பேரணியாக சென்று வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் போலிஸார் அங்கு குவிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் பரப்பு ஏற்பட்டது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்த மாணவர்கள் பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசுத்தலைவர் வருகை தரும்போது தங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்Conclusion:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Last Updated : Dec 16, 2019, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.