முன்னதாக, புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஜெயபால், அவரது குடும்பத்தினர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இச்சூழலில் இம்மாத (ஆகஸ்ட்) தொடக்கத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் தாயார் ராஜம்மாளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனையில் அமைச்சர் கந்தசாமி, மகன் விக்னேஷ் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியானது.
இவர்கள் ஜிப்மரில் சிகிச்சை பெற்றனர். அறிகுறி இல்லாததால் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இச்சூழலில் கந்தசாமிக்கு தீடிரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இன்று (ஆக.10) ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்காலைச் சேர்ந்தவர். புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அரசு இல்லத்தில் தங்கியுள்ளார். அவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டது. இதனால், சுகாதாரத் துறை சார்பில் அவருக்கு இன்று (ஆகஸ்ட் 10) கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், கரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து, ஜிப்மரில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.