ETV Bharat / bharat

லாரி மீது கார் மோதிய விபத்து - வெளியான சிசிடிவி காட்சி - லாரி மீது கார் மோதிய விபத்து

புதுச்சேரி: காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Car accident Video
lorry car accident
author img

By

Published : Oct 30, 2020, 4:07 PM IST

Updated : Oct 30, 2020, 4:33 PM IST

புதுச்சேரி கீழ் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (75), அவரது மனைவி அலமேலு (65), மகன் தேவநாதன் (35) மூன்று பேரும் இன்று (அக்.30) காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சிக்காக வழுதாவூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

செல்லிப்பட்டு கிராமத்திலிருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி உளவாய்க்கால் என்ற பகுதியில் கார் மீது மோதிய விபத்தில் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்தக்காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரி மீது கார் மோதிய சிசிடிவி காட்சி

அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கழிவுநீரால் வந்த தகராறு: இளம்பெண்ணை குத்திக்கொன்ற அண்டை வீட்டுக்காரர்!

Last Updated : Oct 30, 2020, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.