புதுச்சேரி: சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் ஆகிய பகுதிகளில் நேற்று (ஜூலை17) காலை 10 மணியிலிருந்து இன்று காலை 10 மணி வரை 801 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று புதுச்சேரியில் 51, ஏனம் பகுதியில் 7 பேருக்கு என புதிதாக 58 பேருக்கு கரோனா கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இதுவரை, புதுச்சேரியில் மொத்தம் 1, 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் இதுவரை 1, 066 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது 804 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இன்று மட்டும் காரைக்கால் பகுதியில் 2 பேரும், ஏனம் பகுதியில் ஒருவர் என மூன்று பேர் இறந்துள்ளனர். இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 28 பேர் கரோனா பாதிப்பில் இறந்து உள்ளனர். இன்று மட்டும் 48 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்று உள்ளார்கள்.
எனவே பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் தகுந்த இடைவெளியுடன் பாதுகாப்புக்காக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நாட்டுத் துப்பாக்கியால் மயிலை வேட்டையாடிய இருவர் கைது!