ETV Bharat / bharat

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க ஒப்புதல்

author img

By

Published : Jun 4, 2020, 4:57 PM IST

புதுச்சேரி: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு தடை கோரிய வழக்கில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

free rice distribution
pondicherry 3 months free rice distribution

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதம்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியிருந்த நிலையில், இலவச அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ஏற்று, புதுவையில் அரிசிக்கு பதில் பணம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து புதுவை முதலமைச்சர் நாராயணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், அரிசிக்கு பதில் பணம் வழங்கலாமா? என்பது குறித்த பிரச்னையில், குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்கு புதுச்சேரி அரசு கட்டுப்பட வேண்டும் எனக் கூறி, துணைநிலை ஆளுநரின் உத்தரவை உறுதி செய்து, முதலமைச்சர் நாராயணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாராயணசாமி மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், யூனியன் பிரதேச அரசின் முடிவுகளுக்கு முரணான கருத்துக்களை தெரிவிக்கவும், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், சட்டப்பூர்வ காரணங்கள் இல்லாமல், அரசின் திட்டத்துக்கு எதிரான கருத்தை தெரிவிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துணை நிலை ஆளுநரின் முடிவுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை எனவும் கூறப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளுக்கு பதில், மாற்று திட்டத்தை அறிவிக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரிசிக்கு பதில் பணம் கொடுக்கும் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டத்துக்கு விரோதமானது எனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத துணை நிலை ஆளுநர் தலையிடுவது ஜனநாயக கொள்கைகளுக்கு விரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் தலையிட மத்திய அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது கரோனா பரவல் காரணமாக மூன்று மாதங்களுக்கு அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.