புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”புதுச்சேரியில் ஆறு பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்கள் நலமுடன் இருக்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இதுவரை புதுச்சேரியில் ஊரங்கு தடையை மீறி கடைகளை திறந்து வைத்திருந்த 21 மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேனியில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற இருவர் கைது!