உலக நாடுகளை மிரட்டிய கரோனா வைரஸூக்கு அச்சமின்றி நாட்டில் மக்கள் வெளியே சுற்றித்திரிகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் இக்கதை தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
மக்களை எளிதில் சென்றடையும் சமூக வலைதளங்களில் கரோனா குறித்த பொய்யான தகவல்களை பகிரக்கூடாது என்பதிலும் தீவிரமாக உள்ளனர். மேலும், குறும்படம், காணொலி, பாடல், அனிமேஷன் வீடியோ மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
ஆந்திராவில், காசிபுகா நகர் காவல் துறையினர், சில கலைஞர்களை எமதர்மராஜா, சித்திரகுப்தர் போல் வேடமணிய வைத்து கரோனா வைரஸின் ஆபத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்தனர். அதேபோல், ஹைதராபாத்தில் போக்குவரத்து காவலர்கள் கரோனா வடிவிலான ஹெல்மெட்டை அணிந்து சாலையில் வரும் மக்களிடம் கரோனாவின் அதீத தீவிரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், அசாம், கேரளா,தமிழ்நாடு காவல் துறையினர் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருகிறார்களா என்பதை ட்ரோன்கள் மூலமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு: இந்திய ராணுவம் பதிலடி!