ETV Bharat / bharat

பாபா கா தாபா பெயரில் பண மோசடி செய்த யூடியூபர் மீது வழக்கு பதிவு - பாபா கா தாபா

டெல்லி: பாபா கா தாபா வழக்கில் பெரிய திருப்பமாக, யூடியூபர் கவுரவ் வாசன் மீது டெல்லி காவல்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், நன்கொடை நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police-register-case-against-youtuber-for-cheating-baba-ka-dhaba-owner

author img

By

Published : Nov 7, 2020, 8:01 AM IST

அக்டோபர் 31 ஆம் தேதி, பாபா கா தாபாவின் உரிமையாளர், மால்வியா நகரில் வசிக்கும் காந்தா பிரசாத், யூடியூபர் கவுரவ் வாசனுக்கு எதிராக பண மோசடி புகார் அளித்தார்.

அந்த புகாரில், "டெல்லியில் உள்ள ஹனுமான் மந்திர் மால்வியா நகர் சந்தையில் பாபா கா தபா என்ற பெயரில் ஒரு ஸ்டாலை நடத்தி வருகிறேன். கடந்த அக்டோபர் மாதத்தில் கவுரவ் வாசன் என்னை அணுகி ஒரு வீடியோ பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எனது வணிகத்தை மேம்படுத்த உதவுவதாக கூறினார்.

அதன்படி, ஒரு வீடியோ படமாக்கப்பட்டது. வாசன் அந்த வீடியோவை 'ஸ்வாட் ' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, எனக்கு நிதி உதவி செய்ய பொதுமக்கள் பணத்தை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுள்ளார்.

அந்த வீடியோ வைரலாகியது. கவுரவ் வேண்டுமென்றே தனது மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கி விவரங்கள், மொபைல் எண்ணை நன்கொடைக்காக பகிர்ந்து பெரும் தொகையை பெற்று கொண்டு என்னை ஏமாற்றினார்," என்று தெரிவித்துள்ளார்.

80 வயதான பிரசாத், ஊரடங்கு காலத்தில் தனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கண்ணீருடன் விவரிக்கும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலானது.

"இந்தப் புகார் தொடர்பாக, பி.எஸ். மால்வியா நகர் காவல் நிலையத்தில், இந்திய தண்டணைச் சட்டம் 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்று துணை காவல் கண்காணிப்பாளர் அதுல் தாக்கூர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.