கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியவாசிய தேவைகளைத் தவிர வேறு எதற்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை மீறுவோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஊரடங்கை மீறி அவ்வழியாக சிலர் நடைபயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்களை சுற்றிவளைத்த காவல் துறையினர், அவர்களை யோகா செய்ய வைத்து நூதன தண்டனையை வழங்கினர்.
இந்தியாவிலேயே கரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்தது மகாராஷ்டிரா தான். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் தான்தோன்றித்தனமாக சுற்றித்திரிவது வேதனையளிப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 2,916 ஆக உயர்ந்துள்ள நிலையில், 187 உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கருணை காட்டாத காவலர்கள்... ஒரு கி.மீ. தூரம் தந்தையை தோளில் சுமந்த மகன்