ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் உள்ள பவர் கிரிட் நிறுவனத்தில் மாயாராம் கட் காவலராகப் பணியாற்றினார். இவர் அருகிலுள்ள ஜெய்சல்மரில் உள்ள உணவக விடுதியில், சக அலுவலர்களுடன் தங்கியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது சக ஊழியர்கள் அனைவரும் வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் வேலைகளை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பியபோது மாயாராம், அறையிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் மாயாராமின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயாராம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொது முடக்கத்தின் மத்தியில் ராஜஸ்தானில் அதிகரித்த குடும்ப வன்முறை!