ETV Bharat / bharat

பக்... பக்... என பற்றியெரிந்த பைக்! காப்பாற்றிய போலீசார் - எடாவா

லக்னோ: எடாவா என்றப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை பெரிய ஆபத்தில் இருந்து காவல் துறையினர் காப்பாற்றிய காட்சி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

பற்றி எரிந்த பைக்
author img

By

Published : Apr 16, 2019, 3:46 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் எடாவா தேசிய நெடுஞ்சாலையில் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர். அப்போது வண்டியின் சைலன்சரில் தீப்பற்றியெரிவது கூட தெரியாமல் இருவரும் பயணித்தனர். இந்நிலையில், அவ்வழியாக வாகனத்தில் வந்த காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் தீப்பிடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை பின்தொடர்ந்துச் சென்ற காவல் துறையினர் அந்த தம்பதியினரை வண்டியை விட்டு இறங்கச் சொல்லி கத்தியுள்ளனர்.

இதன்பின்னர், வண்டியில் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ந்துபோன தம்பதியினர் உடனடியாக வண்டியை நிறுத்தி கீழே இறங்கினர். வேகவேகமாக வந்த காவல் துறையினர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி தீயை அணைத்து அவர்களை காப்பாற்றினர். இருசக்கர வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த துணிப்பையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது என தெரியவந்துள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் தீக்காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர்.

இந்தத் தீயினால் ஏற்படவிருந்த பயங்கர விபத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பயங்கர சம்பவத்தை படம்பிடித்த உத்தரப்பிரதேச மாநில காவல் துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் தற்போது இந்தக் காணொளி காட்சி வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Intro:100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி கடலூரின் மூத்த குடிமக்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி

Body:கடலூர்
ஏப்ரல் 15,

கடலூரில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மேலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் பொருட்டு 2500 க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் 600க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அன்புச்செல்வன் கடலூரில் மூத்த குடிமகன் ஆகிய நவநீதம்(106) அவர்களை சந்தித்து 100% வாக்களிப்பதன் அவசியத்தையும் துண்டு பிரசங்கத்தையும் வழங்கினார். பின்னர் பாதிரி குப்பத்தைச் சேர்ந்த பொக்கில்லை(103) சந்தித்து 100 சதவீத விழிப்புணர்வு துண்டுப்பிரசுரத்தையும் பழங்களையும் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.