கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவாசியப் பொருள்களை தவிர மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், புதுச்சேரியின் ஆட்டுப்பட்டியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த ஒரு வீட்டிலிருந்து மக்கள் வெளியே வருவதை பார்த்த காவலர்கள் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, அங்கு சென்று சோதனை மேற்கொண்டபோது, சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டுப்பிடித்தனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அரவிந்தன், ரஜினி, பிரபாகரன் ஆகியோர் வாட்ஸ்-ஆப் மூலம் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 32 மது பாட்டில்களும், ரூ. 2500 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கரோனா: செவிலியருக்குப் பதிலாக ரோபோவா? அரசு மருத்துவமனையின் சோதனை முயற்சி...