குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் கடந்த திங்கள்கிழமை, 'எஹ்தாஜி முஷைரா' (Ehtaji Mushaira) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரபல உருது கவிஞர் இம்ரான் பிரதாப்ஹார்கி, "டெல்லி ஷாஹீன் பாக்கில் நடைபெற்று வரும் போராட்டம் போன்று ஹைதராபாத்தில் நடைபெறவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.
கவிஞர் இம்ரான் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசி இருப்பதாகக் கூறி, அவர் மீது ஹைதராபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து, டெல்லி 'ஷாஹீன் பாக்' பகுதியில் இஸ்லாமியர்கள், குறிப்பாக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஜப்பான் சொகுசுக் கப்பல்: 119 இந்தியர்களுடன் டெல்லி வந்திறங்கியது மீட்பு விமானம்