ETV Bharat / bharat

'மனஅழுத்தத்தை குறைக்க யோகா செய்யுங்கள்' - காவலர்களுக்கு மோடி அறிவுரை...! - பிரதமர் மோடி அறிவுரை

ஹைதராபாத்: மன அழுத்தத்தைக் குறைக்க காவல் துறையினர் யோகா பயிற்சியை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

pm-to-virtually-address-ips-probationers-today

author img

By

Published : Sep 4, 2020, 4:55 PM IST

புதிதாக ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடினார். அதில் பேசுகையில், ''வேலைப்பளுவும், அழுத்தமும் அனைவருக்கும் உண்டு. ஏன் விவசாயிகளுக்கு உண்டு. அது வாழ்க்கையின் ஒரு பகுதி. அது ஒன்றும் நிர்வகிக்க முடியாதது அல்ல.

நமது தேவையையும், பொறுப்புகளையும் சரியாக புரிந்து வைத்திருந்தோம் என்றால் எளிதாக நிர்வகிக்கலாம். காவல் துறை பணிகளில், எதிர்பாராத ஒரு விஷயத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதனோடு சேர்த்து தொடர் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். நீங்கள் கடமைக்காக செல்லும்போது, இதுபோன்ற தலைப்புகளில் பேசும் மனிதர்களையோ, ஆசிரியர்களையோ சந்தியுங்கள். அது மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்யும். மேலும் யோகா, பிராணாயாம போன்ற பயிற்சிகளை விருப்பத்துடன் மேற்கொண்டால், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.

மக்களின் பார்வையில் காவல் துறையினர் என்றால் அடிப்பவர்கள் என்பதாகவே உள்ளது. ஆனால் அதற்காக அவர்கள் மனிதாபிமானமிக்க பணிகளில் ஈடுபடவில்லை என்று அர்த்தமல்ல. காவலர்களின் பயணிகளை எப்போதும் மக்கள் உணர்வதில்லை.

காவலர்களிடம் பேசிய பிரதமர் மோடி

கரோனா வைரஸ் காலத்தில் காவலர்கள் உணவு வழங்கியதையும், வீடு இல்லாதவர்களை முகாமிற்கு அழைத்துச் சென்றதையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ந்ததையும் மக்கள் கண்டுள்ளனர். காவல் துறையினரின் இந்த அணுகுமுறையை பள்ளிகள் எழுத்து மூலம் பாராட்டு தெரிவித்து, அதை காவல் நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும். இதுபோன்றவை ஆன்லைனிலும் பகிரலாம்'' என்றார்.

இதையும் படிங்க: காணாமல் போனவைகளின் பட்டியலை வெளியிட்ட ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.