டெல்லி: கொச்சி- மங்களூரு குழாய் வழி எரிவாயு திட்டம் ஜனவரி 5ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
கொச்சி- மங்களூரு குழாய் எரிவாயு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்கிறார். காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த விழாவில் இரு மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
கெயில் இந்தியாவால் தொடங்கப்பட்டுள்ள, 450 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி ஆகும். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு கொச்சியிலிருந்து கர்நாடகா செல்கிறது.
அதாவது கொச்சி எல்என்ஜி நிறுவனத்தின் கர்நாடகத்தில் உள்ள மங்களூருக்கு எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களை கடந்து செல்கிறது.
இந்த எரிவாயு திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிவாயுவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.