டெல்லி: இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் 93ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நாளை (டிச. 12) காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசவுள்ளார்.
மேலும் அதே நாளில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். பிரதமர் அலுவலகத்தின் தகவல்படி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் இந்த மாநாடு டிசம்பர் 11, 12, 14ஆம் தேதி நடைபெறுகிறது. "உத்வேக இந்தியா" (Inspired India) என்ற தலைப்பின்கீழ் நடைபெறும் இந்த மாநாடு ஓராண்டு காலம்வரை நடைபெறும் என்று தெரிகிறது.
இந்நிகழ்ச்சியில் பல அமைச்சர்கள், அலுவலர்கள், தொழில்துறைத் தலைவர்கள், சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டின்போது, பொருளாதாரத்தில் கரோனா வைரசின் தாக்கங்கள், அரசால் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்திற்கான முன்னேற்ற வழி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் இந்தக் காணொலி கண்காட்சி உலகெங்கிலும் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், அவர்களின் வணிக வாய்ப்புகளை முன்னேற்றவும் ஒரு வாய்ப்பை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய தொழில் துறை கூட்டமைப்பான ஃபிக்கியின் 2ஆவது நாள் கருத்தரங்கம்