அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும், மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்குத் தர வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாகப் பிரபல யோகா குரு ராம்தேவ் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
யோகா விழா ஒன்றில் பங்கேற்பதற்கு கர்நாடக மாநிலம், உடுப்பி வந்துள்ள ராம்தேவ், அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான வாடிகன், இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்கா போல, அயோத்தியில் ராம் ஜென்ம பூமி உருவாக வேண்டும் என்று கூறிய ராம்தேவ், அங்கு அமையவுள்ள ராமர் கோயில் வேத கலாசாரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ரஜினி அரசியலுக்கு வருவது சாமி கையில் உள்ளது' - சத்தியநாராயண ராவ்!