கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எந்த விவாதத்திலும் ஈடுபடவில்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் சிஏஏ என்பது குடியுரிமையை கொடுப்பதே அன்றி, அதை பறிப்பது அல்ல என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் என்பிஆர் மற்றும் என்ஆர்சி, உடன் தொடர்புடையதாக கருதப்படும் சிஏஏ பலரை குடியுரிமை அற்றவர்களாக ஆக்கும் என்றும் குடியுரிமையை அவர்களிடம் இருந்து பறிக்கும் என்றும் என்னை போன்ற பலர் நம்புகிறோம்.
அதனால் மோடி தன்னை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் 5 விமர்சகர்களை அழைத்து, அவர்களுடன் ஒரு கேள்வி - பதில் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும். அது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். மக்கள் அதைக் கேட்டு, சிஏஏ தொடர்பான அவர்களின் முடிவை எடுக்கட்டும். இதற்குச் சாதகமான பதிலை பிரதமர் வழங்குவார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'சி.ஏ.ஏ.வுக்கு எதிராக அணிதிரளுவோம்' - எதிர்க்கட்சிகளுக்கு காங். அழைப்பு