இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ள மோடி அந்நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "2.6 மில்லியன் இந்தியர்களின் இரண்டாவது வீடாக சவுதி அரேபியா உள்ளது. அதன் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். ஹஜ் பயணத்திற்காகவும் வரத்தகத்திற்காகவும் பல இந்தியர்கள் சவுதி அரேபியாவிற்கு அடிக்கடி வருகின்றனர்.
சவுதி அரேபியா வாழ் இந்தியர்களால் இருநாட்டு உறவுகள் மேம்பட்டுள்ளன. இந்தியா இதைக்கண்டு பெருமை அடைகிறது. வரும் காலங்களிலும் இவர்கள் இருநாட்டு உறவில் முக்கியப் பங்காற்றுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
பின்னர், நாட்டின் தலைநகரான ரியாத்தில் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு, வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு போன்ற பல விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுத்திகரிப்பு நிலையத்திற்கு லட்சம் கோடி ரூபாய் முதலீடு - பிரதமர் நரேந்திர மோடி