நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும் விதமாக நடத்தப்படும் மான் கி பாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியா மிகப் பெரிய திருவிழாவை நடத்த காத்துக்கொண்டிருக்கிறது, அதனை உலகமே உற்று கவனித்துக்கொண்டிருக்கிறது. ஆம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அவரின் வாழ்க்கையிலிருந்து சேவையை பிரிக்க முடியாது.
திறந்தவெளியில் மலம் கழிப்பதை கைவிடுதலை மட்டும் அவருக்கு நாம் செலுத்த வேண்டிய கடமை அல்ல. பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். அதுவும் நாம் அவருக்கு செலுத்த வேண்டிய கடமைதான். ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு நாள் கொண்டாடப்படவுள்ளது, எனவே அனைவரும் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்" என்றார்.