பிரதமர் மோடி மார்ச் 13ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையே நடைபெறவிருந்து உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்தார். இருதரப்புக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மையமாக வைத்து இந்த மாநாடு நடைபெறவிருந்தது.
இந்நிலையில் உலகளாவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மோடியின் இந்த வெளிநாட்டுப் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இருதரப்பு பேச்சுவார்த்தை தற்காலிகமாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானவுடன் மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும், வங்கதேச நாட்டின் நிறுவனராகப் கருதப்படும் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்குமாறு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா அழைப்புவிடுத்துள்ளார் எனவும் மோடியின் இந்தப் பயணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என ராவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வங்கதேசம் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து முஜ்பூர் ரஹ்மான் போராட்டம் நடத்திய நிலையில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ராணுவ நடவடிக்கையின் மூலம் வங்கதேச நாடு உருவாக வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசின் புள்ளிவிவரங்களில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்!